புகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா என்ன படித்துள்ளார் தெரியுமா? இதோ.

புகழின் உச்சத்தில் இருந்த நடிகை மீனா என்ன படித்துள்ளார் தெரியுமா? இதோ.


Actress meena educational qualification details

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை மீனா. நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் 1982 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிப் படங்களில் பல நூறு திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார் நடிகை மீனா. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகை மீனா தற்போது ஒரு சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். 

meena

புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகை மீனா ஒரு பேட்டியில் தனது படிப்பு விபரம் பற்றி கூறியுள்ளார்.  அதில் சிறு வயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் தனது படிப்பை எட்டாம் வகுப்பிலேயே நிறுத்தி விட்டதாகவும் அதன் பிறகு தனியாக கோசிங் சென்றே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாகவும் நடிகை மீனா கூறியிருந்தார். 

மேலும் சினிமாவில் நடித்துக்கொண்டே திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் வரலாற்று பிரிவில் பட்டம் பெற்று உள்ளதாகவும் நடிகை மீனா கூறியுள்ளார். மீனாவை அடுத்து அவரது மகள் நைனிகா விஜயின் தெறி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கலக்கி வருகிறார்.