சினிமா

ப்பா... என்ன ஒரு அழகு... இப்படி ஒரு சேலஞ்ச்சா... வைரலாகும் மீனாவின் கியூட் வீடியோ.!

Summary:

ப்பா... என்ன ஒரு அழகு... இப்படி ஒரு சேலஞ்ச்சா... வைரலாகும் மீனாவின் கியூட் வீடியோ.!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  பிரபலமானவர் நடிகை மீனா. அதனைத் தொடர்ந்து அவர் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். பின்னர் அவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பிரபு, அஜித் என பல  பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

90'ஸ் காலகட்டங்களில் இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கிய அவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அசத்தலாக நடிக்கக் கூடியவர். இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு இடைவெளிவிட்டு இருந்த அவர் தற்போது மீண்டும் பல திரைப்படங்களில் முன்னணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை மீனா வெளியிட்டுள்ள வீடியோ அனைவரும் ரசிக்கும் வகையில் உள்ளது. அதாவது இன்ஸ்டாகிராமில் பரவும் சேலஞ்ச் ஒன்றை மேற்கொண்டு மீனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement