திருமணமான நடிகரிடம் காதலில் விழுந்த பிரபல 90s நடிகை.. கணவர் இறந்த பின்னும் இதே பிரச்சனையா?..!Actress Meena cinema rumour

மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா. இவர் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து பல படங்களில் நடித்து அது மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து மிகப்பெரிய நடிகையாகவும் உருவாகினார். 

1990-இல் தமிழில் ஒரு புதிய கதை என்ற படத்தின் மூலமாக இவர் கதாநாயகியாக அறிமுகமானார். தனது திரையுலக வாழ்க்கையில் எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்காத நடிகை மீனா. பல நடிகர்களால் திருமணம் செய்ய விரும்பப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Actress meena

ஆனால் அவர்கள் யாருக்கும் இல்லாமல் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை அவர் திருமணம் செய்தார். கடந்த 1990களில் திருமணமான நடிகர் ஒருவரை அவர் காதலிப்பதாக வதந்தி வெளியான நிலையில், அன்றைய நாட்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதே வதந்தி இன்று மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.