அதிகாலை 3 மணிக்கு படுக்கைக்கு அழைப்பு.! இதனாலேயே நிறைய வாய்ப்பு மிஸ் ஆகிருச்சு.! கமல், சிம்பு பட நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!!

அதிகாலை 3 மணிக்கு படுக்கைக்கு அழைப்பு.! இதனாலேயே நிறைய வாய்ப்பு மிஸ் ஆகிருச்சு.! கமல், சிம்பு பட நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!!


actress-mallika-sheraavath-share-about-adjustment-in-ci

முன்னணி நடிகர்கள் அழைக்கும் நேரத்திற்கு அவர்களது வீட்டிற்கு சென்று அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால் உடனே  படத்தில் இருந்து நீக்கிவிடுவார்கள் என பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையுலகில் பட வாய்ப்புக்காக முன்னணி பிரபலங்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக பல நடிகைகளும் இதற்கு முன்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாலிவுட் சினிமாவில் மர்டர் என்ற படத்தின் மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை மல்லிகா  ஷெராவத்.அவர் செம கிளாமராக எல்லைமீறி நடிக்கக் கூடியவர்.

மல்லிகா ஷெராவத் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான தசவதாரம் படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்திருப்பார். மேலும் சிம்பு  நடிப்பில் வெளிவந்த ஒஸ்தி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு செம கவர்ச்சி  குத்தாட்டம் போட்டிருப்பார். இந்நிலையில் அண்மையில் படபிரமோஷன் விழாவில் கலந்துகொண்ட அவர் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனையை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

mallika sheravath

அவர் கூறியதாவது, நான் அட்ஜஸ்ட் பண்ணாததால் முன்னணி ஹீரோக்கள் பலரும்  என்னுடன் நடிக்க மறுத்துள்ளனர். அவர்களுக்கு தங்களது கட்டுப்பாட்டில், தாங்கள் சொல்வதை கேட்டு அட்ஜஸ்ட் செய்யும் நடிகைகளைதான் பிடிக்கும். உட்காரு, எழு என்று ஹீரோ என்ன சொன்னாலும் செய்ய வேண்டும். காலை 3 மணிக்கு ஒரு ஹீரோ போன் செய்து வீட்டிற்கு வா என்றால் உடனே செல்ல வேண்டும். அதற்கு மறுப்பு தெரிவித்து செல்லாததால் படத்தில் இருந்து என்னை  நீக்கிவிட்டார்கள். அவ்வாறு படுக்கையை பகிர மறுத்ததால் எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமல் போனது என மல்லிகா ஷெராவத் வேதனையுடன் கூறியுள்ளார்.