மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகனனை பற்றிய வதந்தி ... முற்றுப்புள்ளி வைத்த மாளவிகா மோகனன்.!?

மாஸ்டர் பட கதாநாயகி மாளவிகா மோகனனை பற்றிய வதந்தி ... முற்றுப்புள்ளி வைத்த மாளவிகா மோகனன்.!?


actress-malavika-mohanan-angry-about-her-rumour

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் மாளவிகா மோகனன். இவர் முதன் முதலில் மலையாளத்தில் பட்டம் போல என்ற படத்திலும் ஹிந்தியில் பியாண்ட் தி கிளாவ்ஸ் படத்திலும் நடித்து விருதை பெற்றார்.

மாளவிகா

இதன்பின் இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து மலையாளத்தில் தி கிரேட் பாதர் என்ற த்ரில்லர் படத்தில் நடித்திருந்தார். தமிழில் முதல் படத்திலேயே ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த படமாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்தில் தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற இப்படத்திற்கு பிறகு மாளவிகா மோகனனுக்கு தமிழில் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மாளவிகா

இதுபோன்ற நிலையில், மாளவிகா மோகனன் தற்போது இரண்டாவது ஹீரோயினாக பவன் கல்யாண் படத்திலும் மற்றுமொரு படத்திலும் நடிப்பதாக வதந்தி பரவியது. இதனை தெளிவுபடுத்திய மாளவிகா மோகணன் பவன் கல்யாண் அவர்களை நான் மதிக்கிறேன் ஆனால் அவர் படத்தில் நான் நடிக்கவில்லை. நான் நடிக்கும் மற்றுமொரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் இருப்பது உண்மை தான் ஆனால் நான் இரண்டாவது கதாநாயகி இல்லை என்று கோபத்துடன் கூறியிருக்கிறேன்.