நடிகை லட்சுமி மேனனா இது... அடக்கடவுளே ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இப்படி வித்தியாசமாக மாறிட்டாரே... வைரல் வீடியோ!!



actress-lakshmi-menon-latest-dance-video-viral

தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுடன் இணைந்து கும்கி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். அதனை தொடர்ந்து நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், ரெக்க போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து தல அஜித்துடன் இணைந்து வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். பின்னர் உடல் எடை சற்று அதிகரிக்கவே சினிமாவில் வாய்ப்பின்றி இருந்த லட்சுமி மேனன் மீண்டும் தனது படிப்பில் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது லட்சுமி மேனனின் சமீபத்திய டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் அடக்கடவுளே நடிகை லட்சுமி மேனனா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். அதில் லட்சுமி மேனன் உடல் எடை கூடி ஆளே வித்தியாசமாக இருக்கிறார்.