பயங்கர ஒர்கவுட்! மீண்டும் கும்கி கூட்டணியுடன் ரீஎன்ட்ரி! 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் லட்சுமி மேனன்.

பயங்கர ஒர்கவுட்! மீண்டும் கும்கி கூட்டணியுடன் ரீஎன்ட்ரி! 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் லட்சுமி மேனன்.


Actress lakshmi menon come back after 4 years

கடந்த நான்கு வருடமாக தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகை லட்சுமிமேனன் விரைவில் புது படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன் படத்தை அடுத்து இவர் நடித்த கும்கி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

தொடர் வெற்றிப் படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன் கும்கி படத்தை அடுத்து குட்டிப்புலி, பாண்டியநாடு, மிருதன் போன்ற படங்களில் நடித்திருந்தார். கடைசியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 2016 ஆம் ஆண்டு வெளியான ரெக்க படத்தில் நடித்திருந்த இவர் அதன்பிறகு படிப்பில் கவனம் செலுத்தப் போவதாக கூறி சினிமாவிலிருந்து விலகினார்.

மேலும் லட்சுமிமேனனின் உடல் எடை காரணமாக இயக்குனர்கள் அவரை சினிமாவில் இருந்து ஒதுக்கியதாகவும் ஒரு காரணம் கூறப்பட்டது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லட்சுமிமேனன் ஆக தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுக்க உள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

Lakshmi menon

லட்சுமிமேனன் அடுத்ததாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக "பேச்சி" என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. லட்சுமி மேனன் விக்ரம் பிரபு இருவரும் கும்கி படத்தில் நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த ஜோடி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கும்கி கூட்டணியுடன் தனது வெற்றிப் பயணத்தை தொடங்க இருக்கிறார் நடிகை லட்சுமி மேனன். இந்த படத்தை இயக்குனர் முத்தையா அவர்கள் இயக்க இருப்பதாகவும், படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாக இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.