சினிமா

90 கிட்ஸ்களின் கனவுக்கன்னி லைலா வா இது? 20 வயதில் இருந்ததுபோல் மாறிய ஆச்சர்யம்..! வைரல் புகைப்படம்

Summary:

நடிகை லைலா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

நடிகை லைலா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

கேப்டன் விஜகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆனவர் நடிகை லைலா. தொடர்ந்து தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார் லைலா. லைலாவை பிடித்த பலருக்கும் அவரிடம் மிகவும் பிடித்த ஒன்று அவரது சிரிப்புதான்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் இவர் 90ஸ் ஹிட்ஸ்களின் கனவு கன்னி என்றே கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்தான் லைலா. சினிமாவில் பிசியாக இருந்த இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி உள்ளார்.

இந்நிலையில் மீண்டும் மீடியா பக்கம் தலைகாட்ட தொடங்கிய இவர் சமீபத்தில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டார். அப்போது கொஞ்சம் குண்டாக, வயதான தோற்றத்தில் இருந்த லைலா தற்போது கடுமையாக ஒர்க் அவுட் செய்து 20 வயதில் ஹீரோயினாக வரும்போது எப்படி இருந்தாரோ அதேபோல் மாறி இருக்கிறார்.

லைலாவின் இந்த மாற்றத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுங்கள் என கேட்டு வருகின்றனர்...


Advertisement