சினிமா

இது நடிகை குஷ்பு-வா இல்ல அவரது மகளா?? இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து குழம்பிப்போன ரசிகர்கள்..

Summary:

நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகை குஷ்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் நடிகைகளில் ஒருவர் குஷ்பு. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்த குஷ்பு, தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். சினிமா, சீரியல், அரசியல், குடும்பம் என தற்போது பயங்கர பிசியாக இருந்துவரும் குஷ்பு, சமீப காலமாக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

உடல் எடையை குறைத்து அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த சில புகைப்படங்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரலானது. இந்நிலையில், மேலும் தனது உடல் எடையை குறைத்து, சிவப்பு நிற உடையில், பார்க்க இளம் பெண் போன்ற தோற்றத்துடன் மீண்டும் சில புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், இது குஷ்புவா? அல்லது அவரது மகளா என நக்கலாக கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement