வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
அடேங்கப்பா.. சரக்கு பாட்டிலை நடிகருக்கு போட்டியாக ஒரே கல்ப்பாக அடித்த கீர்த்தி சுரேஷ்.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!!
நடிகர் நானி நடிப்பில் உருவாகி இருக்கும் தசரா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் படத்தின் பணியாளர்களுக்கு தங்க காயின் வழங்கியதாக சமீபத்தில் செய்து வெளியானது. இந்த திரைப்படம் மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், ட்ரெய்லரில் நானி மதுபானம் அருந்துவது தொடர்பான காட்சி இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் அதனைப் போலவே மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் நானிக்கு போட்டியாக இறங்கியுள்ளார்.
அவர் ஒயின் பாட்டிலை ஒரே கல்பாக விரைந்து குடித்துள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் கலவையான கமெண்டுகளை பெற்றுள்ளது. மேலும் நெட்டிசன்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.