அட ஏங்க என் கல்யாணத்துலயே குறியா இருக்கீங்க.. திருமணம் குறித்து மனம்திறந்த கீர்த்திசுரேஷ்..!!actress-keerthi-suresh-about-marriage

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். நேற்று மாமன்னன் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர், "அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுத்துவிட்டேன். எதற்காக என்னை கல்யாணம் பண்ணி கொடுப்பதிலேயே இருக்கீங்க? அப்படி ஏதேனும் நடந்தால் நான் சொல்கிறேன்" என்று தெரிவித்தார்.