சினிமா

எவ்வளவோ கெஞ்சியும் ரஜினியுடன் நடிக்க வைக்க மறுத்த இயக்குநர்! புலம்பும் பிரபல நடிகை

Summary:

Actress kasthuri about rajini and ajith

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தனது  டிவிட்டரில் பல விசயங்களுக்கு எதிராகவும், ஆதரவாகவும்  குரல் கொடுத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.

மேலும் இதற்கு நெட்டிசன்கள் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்தாலும், அதனை சிறிதும் பொருட்படுத்தாத கஸ்தூரி தொடர்ந்து அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் வெளிப்படையாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இவ்வாறு சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் கஸ்தூரி தற்போது தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த போது ரஜினி மற்றும் அஜித்துடன் நடிக்க வேண்டும் என்ற அவரது நீண்ட நாள் ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார். 

அதில், "ரஜினியுடன் காலா படத்தில் நடிக்க வேண்டும் என்ற பல முறை முயற்சித்தேன். அந்த படத்தில் ரஜினியின் மனைவி மற்றும் காதலியாக நடித்த ஈஸ்வரி ராவ் மற்றும் ஹியூமா குரேசியின் கதாபாத்திரங்களில் நடிக்க இவர் விரும்பியுள்ளார். ஆனால் அம்மா கதாபாத்திரத்திற்கு நீங்கள் ஒத்துவர மாட்டீர்கள் என இயக்குநர் ரஞ்சித் கஸ்தூரியை மறுத்துள்ளார்".

எனினும் இந்த 2019 ஆம் ஆண்டிலாவது ரஜினி மற்றும் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் தனது தீராத ஆசை என நடிகை கஸ்தூரி வெளிப்படையாக கூறியுள்ளார்.


Advertisement