பலரை ஏமாற்றினாரா பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்.? சீரியல் நடிகை வெளியிட்ட சர்ச்சை தகவல்.! 

பலரை ஏமாற்றினாரா பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர்.? சீரியல் நடிகை வெளியிட்ட சர்ச்சை தகவல்.! 



actress kanmani manoharan about barathi kannamma akilan

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முதல் பாகம் முடிந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் நடிகர் பாரதிக்கு தம்பியாக நடித்தவர் அகிலன். இவர் நிறைய சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். 

kanmani manoharan

நடிகர் அகிலன் தனது காதலி அக்ஷயா முரளிதரனை தற்போது திருமணம் செய்துள்ளார். திருமணத்தில் எடுத்த புகைப்படங்களை மிகவும் சந்தோஷத்துடன் அகிலன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இதில் பாரதி கண்ணம்மா சீரியலில் அவருடன் பணியாற்றிய நடிகர் அருண் மற்றும் பரீனா உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

kanmani manoharan

இந்த நிலையில் சீரியலில் அகிலனுக்கு ஜோடியாக அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்த கண்மணி மனோகரன் ஒரு கமெண்ட் போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த கமெண்டில், "இதற்கு முன்பு எத்தனை பேரை ஏமாற்றி இருக்கிறாய்? அதையும் சொல்ல வேண்டியது தானே? கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா?" என்று கூறியுள்ளார்.