நடிகை காஜலுக்கு மாப்பிள்ளை கிடைச்சாச்சா! தீயாய் பரவும் புகைப்படம்! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!



actress kajal agarwal in ajmir tharkha

தமிழ் சினிமாவில் வெளியான  பழனி என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகை காஜல் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து நடிகை காஜல் தற்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் அதற்காக  அவர் தற்காப்பு மற்றும் வர்ம கலைகள் கற்று வருகிறார்.

kajal

இதனை தொடர்ந்து அவருக்கு எத்தகைய பட வாய்ப்பும் இல்லாத நிலையில் நடிகை காஜல்க்கு  விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் காஜல் தனது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தியுள்ளார்.

மேலும் தனது தலையில் பூக்கூடையை சுமந்து சென்று நேர்த்திக் கடனையும் செலுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடிகை காஜல் திருமணத்திற்கு மாப்பிள்ளை கிடைத்து விட்டது எனவும் அதற்காகவே இவர் இந்த நேர்த்திக்கடனை செய்திருப்பதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

kajal

kajal