இந்தியா சினிமா

நல்ல மனசு மேடம் உங்களுக்கு!! காலேஜ் பீஸ் கட்ட காசு இல்லை!! உதவி கேட்ட மாணவி!! 1 லட்சத்தை அள்ளிக்கொடுத்த காஜல் அகர்வால்.!!

Summary:

கல்லூரி கட்டணம் செலுத்த உதவி கேட்ட மாணவிக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளா

கல்லூரி கட்டணம் செலுத்த உதவி கேட்ட மாணவிக்கு 1 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கு என முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை கஜால் அகர்வால். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடந்து முடிந்த நிலையில் தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார் காஜல்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலை ட்விட்டரில் தொடர்புகொண்ட ஐதராபாத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது கல்லூரி தேர்வு கட்டணத்தை செலுத்த 83 ஆயிரம் ரூபாய் தேவை எனவும், தனக்கு உதவி செய்யுமாறும் நடிகை காஜல் அகர்வாலிடம் கேட்டுள்ளார்.

உடனே தனது உதவியாளர் மூலம் சம்மந்தப்பட்ட மாணவியை தொடர்புகொண்டு, அவரது வங்கி கணக்கிற்கு 1 லட்சம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார் காஜல் அகர்வால். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியானநிலையில், காஜல் அகர்வாலின் செயலுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement