இந்த குட்டி குழந்தை முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த பிரபல நடிகை தெரியுமா.!?



actress-kajal-agarwal-childhood-photos-trending-at-soci

காஜல் அகர்வாலின் திரைபயணம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பல ஹிட் திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார். தனது நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியுள்ளார் காஜல் அகர்வால்.

kajal agarwal

குறிப்பாக தமிழில் அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த காஜல் அகர்வால், தமிழில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிகையாக ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து உள்ளார்.

இதையும் படிங்க: போதைப்பொருளுடன் நடந்த பிறந்தநாள் பார்ட்டி; சிக்கிய பிரபல நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்.!

மேலும் தற்போது திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் காஜல் அகர்வால், திரைத்துறையில் இருந்து சிறிது நேரம் கழித்து எடுத்துக்கொண்டுள்ளார். இவர் விரைவில் மீண்டும் திரையில் நடிக்க வேண்டும் என்பது காஜல் அகர்வால் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. சில வருடங்களாக நடிக்காவிட்டாலும் இன்று வரை இவருக்கு ரசிகர் கூட்டங்கள் இருந்து வருகின்றனர்.

kajal agarwal

காஜல் அகர்வால் சிறு வயது புகைப்படம்

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் காஜல் அகர்வால், அவ்வப்போது தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார். தற்போது காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகிய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "படங்களில் கவர்ச்சியாக நடிக்க எனக்கு விருப்பமில்லை" ஆனால் தனுஷ் கூட.. மனம் திறந்து பேசிய நடிகை தன்ஷிகா.!?