சினிமா

அடேங்கப்பா.. சூப்பர் ஸ்டார் ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே பிரபல நடிகை! யார்னு பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து,  சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப

தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து,  சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ரஜினியின் திரைப்படம் வெளியாகிறது என்றாலே அவரது ரசிகர்கள் பெரும் கட்அவுட்டுகள் வைத்து திருவிழாக்களை போல களைக்கட்டுவர்.

தற்போது தமிழ் சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரான நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக அறிமுகமானார். மேலும் அவர் நடிகர் கமலுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு 1978 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் இளமை ஊஞ்சலாடுகிறது. ஸ்ரீதர் என்பவர் இயக்கிய இப்படத்தில் ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு 75000 ருபாய் சம்பளமாக பேசப்பட்டதாம். ஆனால் நடிகை ஜெயசித்ராவிற்கு அவரை விட 25000த்திற்கும் மேல் அதிகமாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை ஜெயசித்ராவிற்கு அப்பொழுதே ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வழங்கப்பட்டதாம். இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் பெற்ற ஒரே நடிகை என்ற புகழை நடிகை ஜெயசித்ரா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement