சினிமா

பிக் பாஸ் ஜனனி ஐயர் காதலர் யார் தெரியுமா? இதுவரை வெளிவரதா காதல் ரகசியம்!

Summary:

Actress janani iyer open talks about her love story

தெகிடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர். தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் தொடரின் போட்டியாளர்களின் இவரும் ஒருவர். ஆரம்பம் முதலே எந்த சண்டைகளிலும் சிக்காதவர்.

இந்நிலையில் தனது காதல் பற்றி தனது தோழி ரித்விகாவிடம் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை ஜனனி. தனது காதல் பற்றி அவரிடம் கூறும்போது தான் ஒருவரை காதலித்தாகவும், எங்கள் காதல் திருமண பேச்சுவார்த்தை சென்றதாகவும் பின்னர் ஸ்டேட்டஸ் காரணமாக நாங்கள் பிரிந்துவிட்டதாகவும் ஜனனி கூறுகிறார்.

அப்போது ரித்விகா யார் அந்த நபர், அவரும் நடிகரா என்று கேட்கிறார். அதற்கு ஜனனனி, அவர் நடிகர் எல்லாம் கிடையாது ஆனால் ரொம்ப பணக்கார குடும்பம் என்கிறார். நாம பசிச்சா சரவண பவன் போவோம், அவங்க பசிச்சா தாஜ் ஹோட்டல் போவாங்க என்று கூறிவிட்டு. செத்தா அவங்க என்ன எடுத்துட்டு போக போறாங்க. ஆனா, ஒரு பொண்ண ஸ்டேட்டஸ்காக வேணானு சொல்லிட்டாங்க என்று மிகவும் வருத்தத்துடன் கூறுகிறார் ஜனனனி. 

எங்கள் பிரிவுக்கு ஸ்டேட்ஸ்த்தான் காரணம் என்றும், என்னிடம் பணம் இல்லை என்பதால்தான் என்னை அவர்கள் நிராகரித்துவிட்டனர் என்றும் தனது சக போட்டியாளர்கள் முன்னிலையில் கண்ணீருடன் கூறினார் நடிகை ஜனனி.


Advertisement