கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
"நடிகை ஹீரா நியாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?!"

90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஹீரா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிப்படங்களில் நடித்துள்ளார். 1991ம் ஆண்டு தமிழில் வெளியான "இதயம்" திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்திலேயே அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.
தொடர்ந்து தமிழில் நீ பாதி நான் பாதி, என்றும் அன்புடன், பேண்ட் மாஸ்டர், திருடா திருடா, நம்ம அண்ணாச்சி, சதிலீலாவதி, காதல் கோட்டை, அவ்வை சண்முகி, சுந்தர பாண்டியன், பூவேலி, தொடரும், சுயம்வரம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
1999ம் ஆண்டு "சுயம்வரம்" படத்தில் தான் கடைசியாக நடித்தார். அதன் பின்னர் திரைத்துறையை விட்டு விலகி, 2002ம் ஆண்டு புஷ்கர் மாதவ் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2006ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார்.
இந்நிலையில், இன்னொரு திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்துவரும் 51 வயதான ஹீராவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்த ரசிகர்கள் "அட! நம்ம ஹீராவா இது?" என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.