20 வயதில் மகள் இருக்க, இரண்டாவதாக காதல் திருமணம் செய்யும் பிரபல நடிகை !

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பூஜா பேடி. இவருக்கு திருமணமாகி 20 வயதில் மகளும், 19 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மகள் அலீனா தற்போது சில படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மகன் கல்லூரியில் படித்து வருகிறான்.
மேலும் 48 வயதான இவர் கணவரை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பள்ளி நண்பர் மானிக் காண்ட்ராக்டர் மீது காதல் மலர்ந்துள்ளது.
அதனை தொடர்ந்து இவருக்கும் காதலர் தினம் அன்று குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது.
மேலும் இவர்களது திருமணம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.