சர்க்கார் பாடலுக்கு மாஸ் டான்ஸ், பட்டையை கிளப்பிய பிரபல நடிகை, ரசிகர்களை வாய் பிளக்க வைத்த வைரலாகும் வீடியோ உள்ளே.!

சர்க்கார் பாடலுக்கு மாஸ் டான்ஸ், பட்டையை கிளப்பிய பிரபல நடிகை, ரசிகர்களை வாய் பிளக்க வைத்த வைரலாகும் வீடியோ உள்ளே.!


actress dance for sarkar movie dance

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

அரசியலை மையமாக இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் படத்தின் சில காட்சிகள் தமிழக அரசியலை கிண்டல் செய்யும் விதமாக இருந்ததால், ஆளும் கட்சியினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால்,படத்தின் சில காட்சிகள் நீக்கப்பட்டன. 

மேலும் சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற  பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற ஓஎம்ஜி பொண்ணு என்ற பாடலுக்கு நடிகை அதுல்யா ரவி நடனமாடியிருந்தார்.அந்த வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார்.

தற்போது அந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வைரலாகி வருகிறது.