முதன்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு வித்தியாசமான பெயரை அறிவித்த நடிகை பூர்ணா... வைரலாகும் புகைப்படம்!!actress-boorna-introduce-her-new-born-baby

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. அதனைத் தொடர்ந்து அவர் ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், கந்தக்கோட்டை, துரோகி தகராறு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சூர்யா நடித்த காப்பான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம், கன்னடம் சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் துபாய் தொழிலதிபர் ஆசிப் அலி என்பவரை நடிகை பூர்ணா திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஆண்டு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

Actress boorna

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பூர்ணாவுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தற்போது முதன் முறையாக தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமின்றி மகனுக்கு ஹாம்டன் என்ற வித்தியாசமான பெயரை வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Actress boorna