மாடர்ன் உடையிலும் மங்களகரமாய் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!! அழகிய புகைப்படம்..

மாடர்ன் உடையிலும் மங்களகரமாய் இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!! அழகிய புகைப்படம்..


actress-aiswarya-rajessh-latest-photo-a8ynzx

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதுவரை பல்வேறு படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம் பெற்றார்.மேலும் சிவகார்த்திகேயனின் நம்ப வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பைபெற்றார். 

தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் இவர், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். பெரியளவில் கவர்ச்சி காட்டாத ஐஸ்வர்யா ராஜேஷ், மாடர்ன் உடையிலும் மங்களகரமாய் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் லைக்ஸ் பெற்றுவருகிறது.