சினிமா

சார் ஒரு லெஜெண்ட் - பிரபுதேவா பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் என்ன கூறுகிறார் பாருங்கள்

Summary:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவாவுடன் லக்ஷ்மி படத்தில் இணைந்து நடித்துள்ளார்.  இதில் ‘பேபி’ தித்யா, கோவை சரளா, கருணாகரன் எனப் பலரும் நடித்துள்ளனர். 

lakshmi tamil  movie க்கான பட முடிவு

இந்நிலையில் பிரபுதேவா சார் ஒரு லெஜெண்ட். அவருடன் இணைந்து நடித்ததில் மிகவும் பெருமையாக இருக்கிறது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

காக்கா முட்டை, ஆறாது சினம் படங்களில் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ்  அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

aishwarya rajesh க்கான பட முடிவு

படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசும்போது ‘பல படங்களில் அம்மா கதாபாத்திரம் பண்ணிட்டோம், கொஞ்ச நாள் அதெல்லாம் விட்டுட்டு கமர்ஷியல் ஹீரோயின் ரோல் பண்ணலாம்னு தான் இருந்தேன்.

தயக்கத்தோடு தான் விஜய் சாரிடம் கதை கேட்டேன். கதை பிடிச்சது ஒத்துக்கிட்டேன். பிரபுதேவா சார் ஒரு லெஜெண்ட். அவரோடு நடிக்கிறது ரொம்ப பெருமையா இருந்தது.

prabudeva க்கான பட முடிவு

நடிகர், நடன இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி அவரிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது. லட்சுமி படத்தில் வேலை செஞ்ச எல்லாக் குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். படம் கண்டிப்பா குழந்தைகளுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.


Advertisement