மஞ்சள் நிற டிரான்ஸ்பெரண்ட் சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை அதிதி சங்கர்... வைரலாகும் புகைப்படம்!!

மஞ்சள் நிற டிரான்ஸ்பெரண்ட் சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்த நடிகை அதிதி சங்கர்... வைரலாகும் புகைப்படம்!!


Actress Aditi Shankar latest photo shoot photos viral

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட மற்றும் பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் இயக்குனர் ஷங்கர். இவரது படங்கள் என்றாலே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வேறு லெவலில் இருக்கும். அப்படியாக பிரபல இயக்குனராக திகழும் ஷங்கரின் இரண்டாவது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதிதியின் முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.‌ அடுத்ததாக அதிதி மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அதிதி ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஹூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது கூட மஞ்சள் நிற டிரான்ஸ்பெரண்ட் சேலையில் க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.