சினிமா

உங்கள் முன்னாள் காதலருடன் அப்படி செஞ்சுருக்கீங்களா.. எடக்குமடக்கான கேள்விக்கு கூலாக பதிலளித்த விருமாண்டி நடிகை!!

Summary:

உங்கள் முன்னாள் காதலருடன் அப்படி செஞ்சுருக்கீங்களா.. எடக்குமடக்கான கேள்விக்கு கூலாக பதிலளித்த விருமாண்டி நடிகை!!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அபிராமி. அதனைத் தொடர்ந்து ஹீரோயினாக அவதாரம் எடுத்த அவர் பல படங்களில் நடித்து முன்ணனி நாயகியாக வலம் வந்தார். அதனை தொடர்ந்து நடிகை அபிராமி தமிழ் சினிமாவில் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த வானவில் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து அவர் கமல், பிரபு, சரத்குமார் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவர் நடிகர் கமலுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் தற்போது அவர் மலையாளம், கன்னடம் படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அண்மையில் கேள்வி போட்டி ஒன்றில் ரசிகர்கள் கேட்ட எடக்கு மடக்கான கேள்விகளுக்கு கூலாக பதில் அளித்துள்ளார். அப்பொழுது நெட்டிசன் ஒருவர், உங்கள் முன்னாள் காதலருக்கு, காதல் முறிவுக்கு பின் முத்தம் கொடுத்துள்ளீர்களா?? என கேட்டுள்ளார். அதற்கு அவர் உடனடியாக இல்லை என பதில் அளித்துள்ளார்.

 
    


Advertisement