ஓடும் ரயிலில் திடீரென ரம்பாவைத் தாக்கிய பிரபல நடிகை.. என்ன நடந்தது.?actresa-laila-suddenly-hit-ramba

1993ம் ஆண்டு "உழவன்" திரைப்படத்தில் அறிமுகமானவர் ரம்பா. இதையடுத்து சுந்தர். சி இயக்கத்தில் "உள்ளத்தை அள்ளித்தா" படத்தில் நடித்துப் பிரபலமானார். தொடர்ந்து சுந்தர புருஷன், செங்கோட்டை, அருணாச்சலம், நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

ramba

மேலும் விஜயகாந்துடன் "கள்ளழகர்" படத்தில் அறிமுகமானவர் லைலா. தொடர்ந்து பார்த்தேன் ரசித்தேன், தில், தீனா, உன்னை நினைத்து, நந்தா, பிதாமகன், கம்பீரம், அள்ளித்தந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், மௌனம் பேசியதே படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையே ஹீரோயின்களை மையப்படுத்திய "3ரோசஸ்" படத்தை ரம்பா தயாரித்தார். அதில் ரம்பா, ஜோதிகா, லைலா ஆகியோர் நடித்தனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக இவர்கள் ஊட்டிக்கு ரயிலில் சென்றபோது லைலா ரம்பாவை ஆவேசமாக தாக்கியுள்ளார்.

ramba

இதுகுறித்து திரைப்பட விமர்சகர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில், "விஐபி படத்தில் சிம்ரனும், லைலாவும் நடிக்க கமிட்டாகினர். அட்வான்ஸ் வாங்க அழைத்தபோது லைலா வர மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த தாணு, ரம்பாவை வைத்து அந்தப் படத்தை எடுத்தார். இதுதான் லைலாவின் கோபத்திற்கு காரணம்" என்று கூறியுள்ளார்.