சினிமா

மிக ஒல்லியாக மாறி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மடோனா.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..

Summary:

தனது உடல் எடையை குறைத்து மிக ஒல்லியாக மாறியுள்ள நடிகை மெடோனா செபாஸ்டினின் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது.

தனது உடல் எடையை குறைத்து மிக ஒல்லியாக மாறியுள்ள நடிகை மெடோனா செபாஸ்டினின் புகைப்படங்கள் தற்போது வைரலாகிவருகிறது.

மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் பிரபலமான நாயகிகளில் மெடோனா செபாஸ்டினும் ஒருவர். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த காதலும் கடந்துபோகும் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை அடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் கவண் படத்தில் நாயகியாக நடித்தார் மெடோனா. கவண் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றிருந்தாலும் மெடோனாவுக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் அமையவில்லை.

தற்போது வானம் கொட்டட்டும் என்ற படத்தில் நடித்துவருகிறார் அம்மணி. சினிமா போக, எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மிகவும் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார் மெடோனா. இதோ அந்த புகைப்படங்கள்...

 


Advertisement