முன்னாள் காதலனின் பகீர் குற்றசாட்டு.! ஆயிஷா இப்படிபட்டவர்தான்! ரகசியங்களை உடைத்த நடிகர் விஷ்ணு!!

முன்னாள் காதலனின் பகீர் குற்றசாட்டு.! ஆயிஷா இப்படிபட்டவர்தான்! ரகசியங்களை உடைத்த நடிகர் விஷ்ணு!!


Actor vishnu talk about ayisha in interview

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டுள்ளவர் ஆயிஷா. இவர் இதற்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சத்யா சீரியலில் ஹீரோயினாக நடித்து தமிழ் மக்களிடையே பரிச்சயமானவர். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தபிறகு அவரது முன்னாள் காதலர், ஆயிஷா ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். அதனை மறைத்து என்னை காதலித்தார். பின் நடிகர் விஷ்ணுவை காதலித்து என்னை கழட்டிவிட்டார். தற்போது வேறொருவரை காதலிக்கிறார் என பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.

மேலும் அவர் தன்னுடைய காதல் பிரிந்ததற்கு விஷ்ணுதான் காரணம் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து தற்போது விஷ்ணு பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், ஒரு பெண்ணை குறித்து அவர் ரியாலிட்டி ஷோவில் இருக்கும்போது, அவர் இல்லாத நேரத்தில் தவறான தகவல்களை பரப்புவது சரியல்ல.

Vishnu

மேலும் நேர்காணல் ஒன்றில் டி.டி பேசிய வீடியோவை போட்டு காட்டியுள்ளார். அதில் டிடி, ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் நீங்கள் தப்பான ஒரு பொருளை தேர்ந்தெடுத்தது தெரிந்தால் உடனே யோசிக்காமல் கீழே வைத்துவிடுங்கள். யார் என்ன சொல்வார்கள் என யோசிக்காதீர்கள். இரு நாட்கள்தான் அவர்கள் பேசுவார்கள் என கூறியிருந்தார். இந்த வீடியோவில் உள்ளது போல ஆயிஷா ஒரு தவறான பொருளை எடுத்துவிட்டார். தெரிந்ததும் அவனை விட்டு வந்துவிட்டார். 

என்னால் ஆயிஷா அந்த நபரை விட்டு வந்திருந்தால் எனக்கு அது சந்தோசம்தான். இப்படிப்பட்ட ஒரு நபருடன் இருந்ததே பெரிய விஷயம். ஆயிஷா ஷார்ட் டெம்பர். உடனே கோபப்பட்டுவிடுவார். அவ்வாறுதான் அவர் பிக்பாஸ் வீட்டிலும் செய்துவருகிறார்  என விஷ்ணு கூறியுள்ளார்.