ரத்னம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு; அறிவிப்பு இதோ.!

ரத்னம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு; அறிவிப்பு இதோ.!Actor vishal Rathnam Movie Song 

 

ஹரி இயக்கத்தில், கார்த்திகேயன் சந்தானம் மற்றும் அலங்கார பாண்டியன் ஆகியோரின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரத்னம் (Rathnam).

நடிகர்கள் விஷால், பிரியா பவானி சங்கர், ராமச்சந்திர ராஜு, சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் யோகி பாபு ஆகியோரின் நடிப்பில் படம் உருவாகி இருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். 

வரும் 26 ஏப்ரல் 2024 முதல் படம் திரைக்கு வருகிறது. இதனால் வெளியீடு மற்றும் விளம்பர பணிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் மார்ச் 29ம் தேதி வெளியாகிறது என படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.