அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
என்னது.. அவரா?? தனுஷ்க்கு வில்லனாகும் சர்ச்சை நடிகர்! அட.. யார்னு தெரியுமா? ஷாக்கில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட், பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் கலக்கி வரும் தனுஷ் தற்போது தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து வருகிறார் . மேலும் அவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் வாத்தி என்ற படத்திலும் நடிக்கிறார்.
அதுமட்டுமின்றி ஏராளமான படங்களை கைவசம் கொண்டிருக்கும் தனுஷ், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக திமிரு, மரியான் படங்களில் நடித்த நடிகர் விநாயகன் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் சமீபத்தில் நடிகர் விநாயகனை சந்தித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விநாயகன் அண்மையில் மீ டூ என்றால் என்ன? எனக்கு ஒரு பெண்ணை பிடித்திருந்தால் அவரிடம் என்னுடன் உறவு கொள்ள விருப்பமா என கேட்டுவிடுவேன். இதுவரை 10 பெண்களுடன் உறவு கொண்டிருக்கிறேன் எனக் கூறி சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.