ஒரே ஜாலிதான்.. காருக்குள் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட விஜய்யின் மகன்.. மீண்டும் வைரலாகும் வீடியோ..!!actor-vijay-son-sanjay-dance-with-friends

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நடிகர் விஜயின் நடிப்பில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படம் விஜய்யின் 68வது படமாகும். 

கடந்த 1999 ஆம் ஆண்டு இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். 

tamil cinema

சஞ்சய் தந்தையை போல விரைவில் திரையில் அடியெடுத்துவைக்கவுள்ளார். அவர் திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்த பாடலுக்கு சஞ்சய் தனது நண்பர்களுடன் ஆடிய வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானதாக இருந்தாலும், அது தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.