அரசு நிர்வாகத்தின் அலட்சியம்.! கள்ளக்குறிச்சி விவகாரம்.! நடிகர் விஜய் கண்டனம்!!actor-vijay-post-about-kallakuruchi-poision-liquor-deat

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் அப்பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது X தளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் வெளியிட்ட பதிவு

அவர் வெளியிட்ட பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

அரசு நிர்வாகத்தின் அலட்சியம் 

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு, ஒற்றுமை" - பக்ரீத் பண்டிகைக்கு த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து.!

இதையும் படிங்க: நடிகர் விஜய், தனுஷ், திரிஷாவிற்கு மருத்துவ பரிசோதனை செய்யுங்க.. பாடகி சுசித்ரா விவகாரம்.! சீறிய வீரலட்சுமி!!