12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை.... தளபதி விஜய் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை.... தளபதி விஜய் ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு!


actor-vijay-planing-to-give-cash-rewards-for-district-t

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக முன்னணியில் இருப்பவர் தளபதி விஜய் . சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பது இவர்தான்.

தற்போது லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில்  ஈடுபட்டு வருகிறார். மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் விஜய்க்கு தமிழகம் எங்கும் ரசிகர் மன்றங்கள் இருந்தன. லட்சக்கணக்கான ரசிகர்கள் அதில் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

thalapathyvijay

சில காலங்களுக்கு முன்பு விஜய் தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அறிவித்தார். இந்த மக்கள் இயக்கத்தின் சார்பாக  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலிலும்  மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டனர். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் அன்று  மாவட்ட தோறும் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது தளபதி அரசியலில் களமிறங்க திட்டம் விடுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட தோறும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்க தொகையை நேரடியாக வழங்குவதற்கு விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இதற்கான தகவல்களை திரட்டும்படி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருக்கிறார். அந்தத் தகவல்களை இந்த மாதம் இருபதாம் தேதிக்குள் திரட்டித் தருமாறு மாவட்ட நிர்வாகிகளை கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய்.