சினிமா

உலகளவில் முதலிடம் பிடித்த நடிகர் விஜய். எதில் தெரியுமா? சந்தோஷத்தில் ரசிகர்கள்

Summary:

சர்வேதேச அளவில் முதலிடம் பிடித்த நடிகர் விஜய்- பெரும் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழகம் மட்டும் இல்லாமலா இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் இந்த படம் வெளியான பின்னர் ஒரு சில அரசியில் பிரபலங்கள் செய்த பிரச்சனையால் இந்த படம் மேலும் பிரபலம் அடைந்தது.

சமீபத்தில் விஜய் டீவியால் நடந்தபட்ட விஜய் அவார்ட்ஸ் விழாவில் “மெர்சல்” படத்தை இயக்கிய அட்லீக்கு அபிமான இயக்குனர் என்ற விருதும், விஜய்க்கு அபிமான நடிகர் என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் மற்றும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.


சமீபத்தில் சர்வேதச அளவில் ஆண்டுதோரும் IARA என்ற விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சர்வேதேச அளவில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பெற்று வருகிறது. இந்த ஆண்டு சிறந்த நடிகர்கள் பட்டியலில்’மெர்சல்’ படத்தில் நடித்ததற்காக விஜய்யின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் சர்வேதேச அளவில் 8 நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர், அதில் இந்திய நடிகர்களில் இடம் பெற்றுள்ளது நடிகர் விஜய் மட்டும் தான். இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிக பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.மேலும், இந்த விழா வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement