வாரிசு படத்தின் பாடலாசிரியருக்கு முத்தம் குடுத்த விஜய்...வைரலாக பரவும் புகைப்படம்..!

வாரிசு படத்தின் பாடலாசிரியருக்கு முத்தம் குடுத்த விஜய்...வைரலாக பரவும் புகைப்படம்..!


actor-vijay-giving-kiss-to-varisu-lyrics-writer

கோலிவுட் திரையுலகில் பாடலாசிரியராக பணிபுரிபவர் விவேக் வேல்முருகன். இவர் எனக்குள் ஒருவன், ஜில் ஜங் ஜக், சர்க்கார், 36 வயதினிலே, மெர்சல், பேட்ட, பிகில், வாரிசு போன்ற படங்களில் பாடலாசிரியராகப் பணி புரிந்து, பல வெற்றிப் பாடல்களைத் தமிழ் திரையுலகிற்கு அளித்திருக்கிறார்.

விஜய்

விவேக் வேல்முருகன் 165க்கும் மேற்பட்ட பாடல்களில் பாடலாசிரியராக இருந்திருக்கிறார். இவர் எழுதிய பாடல்களில் ஆளப்போறான் தமிழன், ஜகமே தந்திரம், டும் டும் டும் போன்ற பாடல்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக இருந்திருக்கிறது.

விஜய் நடித்த மெர்சல், திகில் போன்ற படங்களுக்கு பின் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் பாடலாசிரியராக பணியாற்றி வருகிறார் விவேக் வேல்முருகன். வாரிசு படத்தில் 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் பலராலும் ஷேர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய்
இந்நிலையில் விவேக் வேல்முருகன் ட்விட்டரில் விஜயை பற்றி ட்வீட் செய்துள்ளார். அதில், "சில உறவுகளின் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. நீங்கள் என்னை மூத்த சகோதரன் போல் நேசித்தீர்கள். உங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் மை தளபதி" என்று ட்வீட் செய்திருந்தார். மேலும் நடிகர் விஜய், விவேக் வேல் முருகனை முத்தமிடுவது போல் புகைப்படம் பதிவு செய்துள்ளார். இது ரசிகர்களின் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.