வடிவேலு இனிமேல் படங்களில் நடிக்கக்கூடாது - தயாரிப்பாளர் சங்கம். அதிர்சியில் நடிகர் வடிவேலு.

நகைசுவை நடிகர் வடிவேலுவை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது.தனது நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரையும் மகிழ்வித்தவர். 2011 ஆம் ஆண்டுக்கு முன்புவரை வெளிவந்த பெரும்பாலான படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்தவர்.
அதன் பிறகு , 2011ல் அரசியலில் ஈடுபட்டார்.அதன் பிறகு அவருக்கு பிரச்னைக்கு மேல் பிரச்னை வந்த வண்ணம் உள்ளது.2011 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. அதுவே, வடிவேலுவின் திரைவாழ்க்கை முற்றிலும் சரிய காரணமாக அமைந்தது .
திரும்பவும் சில படங்களில் நடித்தார். இந்நிலையில் 2006ல் வெளியான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் 2ம் பாகம் தயாரிக்கப்பட்டு வந்தது.சம்பள பிரச்னை சம்பந்தமாக வடிவேலு தகராறில் ஈடுபட்டதால், இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் வடிவேலு தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டபோது சரியான விளக்கமளிக்காததால், அவர் இனி படங்களில் நடிக்கக் கூடாதுஎன்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது .