வடிவேலுவின் வாழ்க்கையில் யு-டர்ன் மாயாஜாலம் செய்த கமல் - புகழாரம் சூட்டிய வைகைப்புயல்.!

வடிவேலுவின் வாழ்க்கையில் யு-டர்ன் மாயாஜாலம் செய்த கமல் - புகழாரம் சூட்டிய வைகைப்புயல்.!


Actor Vadivelu about Kamal Hassan

 

திரைத்துறையில் காமெடியனாக அறிமுகமாகி, ஒட்டுமொத்த திரையின் இயக்கத்தையும் கட்டிப்போட்டு மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தவர்களில் வைகைப்புயல் வடிவேலுக்கு ஈடுஇணை இல்லை. இன்றளவில் அவர் மீம் டெம்ப்லேட் நாயகனாக வலம்வருகிறார். 

பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகராக இருந்து வந்த வடிவேலு, ஒருசில காரணங்களால் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது அவர் மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், நடிகர் கமல் ஹாசன் குறித்து அவர் பேசியது வைரலாகியுள்ளது. 

Vadivelu

இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், "கமல் சாறை நான் சாகும் வரை மறக்கமாட்டேன். அவர் தான் எனது வாழ்க்கையில் யு டர்ன் போட்டவர். அன்றே தேவர் மகனுக்கு பின்னர் நான் பிஸியாகுவேன் என கூறினார். 

அதேபோல நான் தேவர் மகனுக்கு பின் அதிகளவில் கவனிக்கப்பட்டேன். அவர் தீர்க்கதரிசி. அவரின் வாக்கு அப்படியே பலித்தது. அவருக்கு கடவுள் என்பவர் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், கடவுளுக்கு கட்டாயம் அவரை பிடிக்கும். அவர் மகான்" என்று பேசினார்.