இது தெரியுமா மக்களே?.. நமக்கு இந்து-ன்னு பேர் வச்சதே ஆங்கிலேயர்கள் தான்.. இராஜராஜ சோழன் இந்துவே கிடையாது - உலகநாயகன் கமல் பளீச் பேட்டி..!!
கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் கார்த்திக், ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய், திரிஷா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன், "திருவள்ளுவருக்கு காவி உடை அணிவது, ராஜராஜசோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். இது சர்ச்சையை கிளம்பியதை தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் சென்னையில் இன்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்புகாட்சியை பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் வெற்றிமாறன் கூறியது குறித்து கேள்வி எழவே, "ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயரே கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர் வைத்த பெயர். அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இப்படம் ஒரு வரலாற்று புனைவு. நம் சரித்திரத்தை புனைய வேண்டாம். பிரிக்க வேண்டாம். மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம்" என கூறியிருந்தார்.