கருப்பன் குசும்புக்காரன் புகழ் நடிகர் தவசி காலமானார்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

கருப்பன் குசும்புக்காரன் புகழ் நடிகர் தவசி காலமானார்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!


actor-thavasi-dead

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்தவர் நடிகர் தவசி.  அந்த படத்தில் அவர் பேசிய 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பெருமளவில் ரசிக்க வைத்தது. மேலும் இவர் பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். 

இந்நிலையில் தவசி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். மேலும்  சிகிச்சைக்கு உதவி கேட்டு அவர் வெளியிட்ட வீடியோவும் வைரலாகி, பல பிரபலங்களும் அவருக்கு உதவி செய்தனர். மேலும் அவரது நிலையை கண்ட பலரும் கண்கலங்கினர்.

thavasi

மேலும் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவர் குணமடைய பிரார்த்தனைகள் மேற்கொண்டனர். இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது நிறைந்த நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி இன்று  காலமானார். தவசியின் மறைவுக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.