வாவ்.. நல்லா வளர்ந்துட்டாரே! நடிகர் தாடி பாலாஜியின் மகள் இப்போ எப்படி இருக்காரு பார்த்தீர்களா!!!actor-thadi-balaji-daughter-photo-viral

தமிழ் சினிமாவில் அஜித், விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறுசிறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தாடி பாலாஜி. பின்னர் விஜய் தொலைக்காட்சியில் களமிறங்கிய அவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். 

ஆனால் சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வரை சென்று தனிதனியே வாழ்ந்து வருகின்றனர். மகள் போஷிகா தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 வில் நித்யா மற்றும் தாடி பாலாஜி இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அப்பொழுது இருவரையும் சமரசம் செய்ய பல வேலைகள் நடந்த நிலையிலும் எந்த பலனும் இல்லை. இருவருமே தனித்தனியாகதான் வாழ்ந்து வருகின்றனர். 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் நித்யா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார்.  இந்நிலையில் அவர் தற்போது தனது மகள் போஷிகாவுடன் ஒரே மாதிரி உடையணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் தாடி பாலாஜியின் மகள் நன்கு வளர்ந்துட்டாரே என ஆச்சரியமடைந்துள்ளனர்.