அருமை.. தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் முக்கிய முயற்சி..! உயரப்போகும் தமிழ் திரையுலகம்..!

அருமை.. தயாரிப்பு நிறுவனத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் முக்கிய முயற்சி..! உயரப்போகும் தமிழ் திரையுலகம்..!


actor surya taken new decision

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சூர்யா. இவர் தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும், "அகரம்" என்ற அறக்கட்டளை மூலமாக ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்கு உதவிசெய்து வரும் சூர்யா, தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல புதுமுக இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கிய அவர்களை வாழவைத்து வருகிறார். 

actor surya

இந்நிலையில் சூர்யாவின் அடுத்த கட்ட பயணமாக திரையரங்கை வாங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி 5 திரையரங்குகளை குத்தகைக்கு வாங்கி நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும், மாவட்டந்தோறும் நடத்துவது குறித்து முடிவெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

actor surya

ரசிகர்கள் எதிர்பார்ப்பை அறியவும், அதனை நிறைவேற்றவும், விநியோகஸ்தர்களின் வலியை உணர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்பே சூர்யா தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் சூர்யா இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.