அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அட.. நடிகர் சூர்யாவின் மகன் மற்றும் மகளை பார்த்தீர்களா! இப்போ எப்படி கிடுகிடுவென வளர்ந்துட்டாங்க!! தீயாய் பரவும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சூர்யா இறுதியாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் கொரோனோவால் தியேட்டர்கள் எதுவும் திறக்கப்படாத நிலையில், ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து அவர் வாடிவாசல் மற்றும் மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். நடிகர் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் இணைந்து ஜோடியாக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுக்கு தியா, தேவ் என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது பிள்ளைகளுடன், ஜோதிகாவின் அக்காவும் நடிகையுமான நக்மா குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் சூர்யாவின் பிள்ளைகளா இது! இப்படி நெடுநெடுவென வளர்ந்துவிட்டார்களே என்ன ஆச்சரியம் அடைந்துள்ளனர்.