சினிமா

வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறாரா.? இல்லையா.? தயாரிப்பாளர் தாணு கொடுத்த அதிரடி விளக்கம்.!

Summary:

வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் நடிகர் சூர்யா "வாடிவாசல்" என்ற படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கவில்லை என்று கலைப்புலி தாணுவின் பெயரில் இருந்த ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட் செய்யப்பட்டது. 

அந்த ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு தயாரிப்பாளர் தாணு தன்னுடைய சொந்த ட்விட்டர் கணக்கில் இருந்து விளக்கம் அளித்துள்ளார். “எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி, வெற்றி மாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் “வாடிவாசல்" வலம் வரும் வாகை சூடும். ” என ட்வீட் செய்து வாடிவாசல் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என ஹாஷ்டேகும் போட்டுள்ளார் அவர். தாணுவின் ட்வீட்டை பார்த்த சூர்யா ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில் தாணுவின் பெயரில் இருந்த போலி ட்விட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.


Advertisement