வாவ்.. தங்க நிறத்தில் தங்கம் போல் ஜொலிக்கும் நடிகை சுஜா வருணி..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..actor-sujavarunee-latest-photo-4BPZPU

நடிகை சுஜாவருணி வெளியிட்டுள்ள அழகிய புகைப்படம் ஒன்று இணையவாசிகளிடையே வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பல்வேறு ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. அதன்பின்னர் பிக்பாஸ் சீசன் ஒன்றில் பாதியில் வந்து பலரின் கவனத்திற்கு வந்தார். அவர் இந்த போட்டியின் இறுதி வரை செல்லவில்லை என்றாலும் ஒவ்வொரு டாஸ்க்கிலும் அவருடைய போராட்டம் ரசிக்கும் வகையில் இருந்தது.

suja varunee

தமிழ் சினிமாவில் சுமார் 40 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் சுஜா. குறிப்பாக தமிழில் மிளகாய், பென்சில், கிடாரி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து  ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த கையோடு தனது நீண்டநாள் காதலர், நடிகர் சிவாஜியின் பேரன் சிவகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது சமூகவலைத்தளகளில் பிஸியாக இருக்கும் அவர் தங்கநிற புடவையில் தங்கம் போல் ஜொலிக்கும் வண்ணம், செம கலக்கல் போஸ் கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தளத்தில் வெளியிட்டுளார். அந்த புகைப்படம்  இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.