மனைவியை இந்த அளவு காதலிக்கிறாரா.! நடிகர் சிவக்குமாரின் உருக்கமான ஆசை..

மனைவியை இந்த அளவு காதலிக்கிறாரா.! நடிகர் சிவக்குமாரின் உருக்கமான ஆசை..


Actor sivakumar openup about his wife

1965ஆம் ஆண்டு 'காக்கும் கரங்கள்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவக்குமார். இவர் நான்கு தலைமுறைகளாக பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, கார்த்தி இருவரும் சிவக்குமாரின் மகன்கள் ஆவார்.

Kollywood

சிவக்குமார் ஒரு சிறந்த ஓவியராகவும், மேடைப் பேச்சாளராகவும் பல பரிமாணம் கொண்டவர். கம்பராமாயணம், மகாபாரதம், திருக்குறள் ஆகியவற்றில் 100 சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார் சிவக்குமார். 

சமீபத்தில் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள வனாலயத்தில், சிவக்குமாரின் திருக்குறள் உரைத் திரையிடல் நிகழ்வு நடந்தது. அதில், தன் வாழ்வில் தான் சந்தித்த நண்பர்கள், உறவினர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என 100 பேரின் வாழ்க்கையைத் திருக்குறளோடு ஒப்பிட்டு ஒரு காணொளியை வெளியிட்டார் சிவக்குமார்.

Kollywood

முன்னதாக பேசிய சிவக்குமார், "பெண்கள் தான் இவ்வுலகின் படைப்புக் கடவுள். என் மனைவி தான் எனக்கு இரண்டாவது தாய். எனவே என் மனைவியின் மடியில், என் உயிர் பிரியாவே நான் விரும்புகிறேன்" என்று உருக்கமாக பேசினார் சிவக்குமார்.