இப்படியா பேசுவாங்க.. யோசிச்சு பேசமாட்டிங்களா?.. பள்ளி குழந்தைகள் முன் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்..! கொந்தளித்த ரசிகர்கள்..!!

இப்படியா பேசுவாங்க.. யோசிச்சு பேசமாட்டிங்களா?.. பள்ளி குழந்தைகள் முன் அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கிய சிவகார்த்திகேயன்..! கொந்தளித்த ரசிகர்கள்..!!


Actor sivakarthikeyan controversy problem

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கு பிடித்த கதாநாயகனாக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த பல படங்களும் ஹிட்டாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் "அயலான்" என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படம் ஏலியன் சம்பந்தப்பட்ட படம் என்றும், ஹாலிவுட் படங்களை மிஞ்சும் என்றும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

மேலும் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியிருந்தது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் நிலையில், ஆரம்பகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் எப்படிப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருப்பார். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார். 

அதில், "நான் எப்போது கொரியன் படம் பார்த்தாலும் அதில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவே தெரிவார்கள். எது ஹீரோ? எது ஹீரோயின்? என்று கூட தெரியாது. என்று நகைச்சுவையாக பேசியிருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

"கொரியால இதை பார்த்தால் டென்ஷன் ஆகிவிடுவார்கள், ஆணும், பெண்ணும் அங்கெல்லாம் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தான் இருப்பார்கள்" என்று கூறியதை பார்த்த ரசிகர்கள் பலரும், கொரியமக்கள் குறித்து பள்ளி குழந்தைகள் முன்பு நீங்கள் எப்படி அவதூறாக பேசலாம்? என்று சர்ச்சையை கிளப்பியுள்ளார்கள்.