சிவகார்த்திகேயன் மூத்த மகள் ஆராதனாவா இது?. எப்படி வளர்ந்துட்டாங்க பாருங்களேன்.!  Actor Sivakarthikeyan Ayalaan Movie AUdio Launch Daughter Aaradhana Pic 

 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தயாராகியுள்ள திரைப்படம் அயலான். வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வரும் ஏலியன் தொடர்பான கதை படமாக உருவாகியுள்ளது.

படத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், டேவிட் ப்ரோட்டன்-டேவிஸ், பானுப்ரியா, பாலசரவணன், கோதண்டம், ராகுல் மாதவ் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் டிரைலர் காட்சிகள், பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அயலான் படத்தின் இசை வெளியீடு விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்று முடிந்தது.

Latest news

இந்நிலையில், அயலான் திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மகள் ஆராதனா ஆகியோருடன் வருகை தந்திருந்தார். 

ஆராதனா கனா திரைப்படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை சிறு மழலையாக பாடியிருந்த நிலையில், தற்போது 10 வயதாகும் சிறுமி ஆகியுள்ளார். அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.