சினிமா

திடீரென பாகிஸ்தானில் ட்ரெண்டாகும் நடிகர் மிர்ச்சி சிவா! வீடியோ!

Summary:

Actor siva tamil movie video trending in pakishtan

கடந்த சில நாட்களுக்கு முன்பு புல்வாமா என்ற இடத்தில் இந்திய CRPF வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதி ஒருவர் நடத்திய வெடிக்காது தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய CRPF வீரர்கள் மரணமடைந்தனர். இதற்கு பதில் தாக்குதல் நடத்தி 300 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றது இந்தியா.

இந்த சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் பரபரப்பு நிலவுகிறது. மேலும், இந்திய விமான வீரர் ஒருவர் பாகிஷ்தானிடம் மாட்டிக்கொண்டது பரபரப்பை மேலும் அதிகரித்தது.

https://cdn.tamilspark.com/media/172055j4-Mirchi-Shiva-.jpg

இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வரும் சூழல் ஏற்பட்டு நிலையில் திடீரென தமிழ் நடிகர் சிவா பாக்கிஸ்த்தானில் ட்ரெண்டாகி வருகிறார். தமிழ் படம் 2 வில் சிவா இந்தியா பாகிஸ்தான் உறவு குறித்து பேசிய ஒரு வீடியோ தற்போது பாகிஸ்தானில் ட்ரெண்டாகிவருகிறது.

இந்தியர், பாகிஸ்தானியர் இருவரும் சகோதர சகோதரிகள் என்றும், பிரியாணிதான் நமது குடும்ப உனவு என்றும் அந்த வீடியோவில் பேசப்பட்டிருக்கும். தற்போது அந்த விடியோவுடன், இந்த வசனத்தை சேர்த்து பாகிஸ்தான் பெண் ஒருவர் #SayNoToWar என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


 


Advertisement