வானத்தைப் போல தொடரிலிருந்து விலகிய முக்கிய நடிகர்! இனி அவருக்கு பதில் இந்த பிரபல ஹீரோவா!!

வானத்தைப் போல தொடரிலிருந்து விலகிய முக்கிய நடிகர்! இனி அவருக்கு பதில் இந்த பிரபல ஹீரோவா!!


actor-shri-going-to-act-in-vanathai-pola-serial-JSMRUP

சன் தொலைக்காட்சியில் காலை தொடங்கி இரவு வரை ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்களைக் கவர்ந்து வரவேற்பைப் பெற்ற தொடர்களில் ஒன்று வானத்தைப் போல. அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் இத்தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்த தொடரில் பாசக்கார அண்ணன் சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் குமார் மற்றும் தங்கை துளசி ரோலில் ஸ்வேதா ஆகியோர் நடித்து வந்தனர்.  இந்தநிலையில் அண்மையில் இந்த இத்தொடரில் இருந்து துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா விலகினார். இதனை தொடர்ந்து மான்யா ஆனந்த் என்பவர் தற்போது துளசி கேரக்டரில் நடித்து வருகிறார்.

vanathai pola

இந்நிலையில் அண்ணனாக சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வரும் தமன் குமாரும் வானத்தைப்போல தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் பரவியது. அவரை தொடர்ந்து தற்போது புது சின்ராசாக பிரபல நடிகர் ஸ்ரீ நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் இதற்கு முன்பு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற தொடரில் நடித்திருந்தார்.